சென்னையில், போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில், நடிகர் சிம்புவின் முன்னாள் உதவியாளர் ஷர்புதீன் உள்ளிட்ட 3 பேர் கைது.போதைப்பொருள் விற்பனையில் கைதானவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நடவடிக்கை.கஞ்சா வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த ஷர்புதீன், சிம்பு நடித்த ஈஸ்வரன் படத்தின் இணை தயாரிப்பாளர்களில் ஒருவர் எனத் தகவல். சினிமா பிரபலங்களுக்கு தனது வீட்டில் தொடர்ந்து போதை பார்ட்டி அளித்து வந்ததும் போலீஸ் விசாரணையில் அம்பலம்.கஞ்சா வழக்கில் கைதான சிம்புவின் முன்னாள் உதவியாளர் ஷர்புதீனிடமிருந்து Fortuner car, இருபத்து ஏழரை லட்சம் ரொக்கம் பறிமுதல்.ஆப்பிள் ஐஃபோன் உட்பட 7 செல்ஃபோன்களையும் பறித்து போலீசார் ஆய்வு. சினிமா பிரபலங்கள் சிலர் போதை பார்ட்டியில் பங்குபெற்று வந்ததும் அம்பலம்ஷர்புதின் அளித்த போதை பார்ட்டியில் பங்கேற்ற சினிமா பிரபலங்கள் யார் என்றும் விசாரணை.