நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு இன்று அதிகனமழைக்கான ரெட் அலர்ட்.புதுச்சேரி மாநிலம் காரைக்கால் பகுதியிலும் இன்று அதிகனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.மயிலாடுதுறை, அரியலூர், சிவகங்கை, தூத்துக்குடி மாவட்டங்களில் இன்று மிகக் கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை.கடலூர், பெரம்பலூர், திருச்சி, மதுரை, விருதுநகர், நெல்லை, கன்னியாகுமரியில் இன்று கனமழை பெய்யும் எனவும் தகவல்.செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களுக்கு நாளை ரெட் அலர்ட்.புதுச்சேரி பகுதியிலும் அதி கனமழை பெய்யும் என எச்சரிக்கை.சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சேலம், பெரம்பலூர் மாவட்டங்களுக்கு நாளை ஆரஞ்ச் அலர்ட்.அரியலூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மிகக் கனமழை பெய்யலாம்.வரும் 30ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்.சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்.