செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரத்தில் RAPIDO இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதிய விபத்தில் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். திருப்பூர் மாவட்டத்தைச் சார்ந்த பாலமுருகன், அதிகாலை சுமார் 2 மணியளவில் தாம்பரத்தில் இருந்து குரோம்பேட்டை செல்வதற்காக RAPIDO வாகனத்தை புக் செய்ததாக தெரிகிறது. RAPIDO ஓட்டுநர் பால்ராஜ், பாலமுருகனை ஏற்றிக் கொண்டு குரோம்பேட்டை நோக்கி சென்றதாக தெரிகிறது. அப்போது கண்ணிமைக்கும் நேரத்தில் வந்த இன்னோவா கார் இரு சக்கர வாகனத்தின் மீது மோதியதில் பாலமுருகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஓட்டுநர் பால்ராஜ் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தொடர்ந்து வழக்குப் பதிவு செய்த போலீசார் விபத்து ஏற்படுத்திவிட்டு தப்பியோடிய கார் ஓட்டுநரை தேடி வருகின்றனர்.