இந்தியா மீதான அமெரிக்காவின் அதீத வரி விதிப்புக்கு மத்தியில், இரு நாடுகளுக்கு இடையே தடைபட்டிருந்த வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தை இன்று மீண்டும் நடக்கிறது. இதுவரை 5 சுற்று பேச்சுவார்த்தைகள் நிறைவடைந்த நிலையில், அமெரிக்காவின் பால்பொருட்களை இந்தியாவில் விற்பனை செய்ய அனுமதிப்பதில் மட்டும் தொடர்ந்து இழுபறி நீடித்தது. அதற்குள் ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதை காரணமாக காட்டி இந்தியா மீது 100 சதவிகிதம் டிரம்ப் வரி விதித்தார். இந்த நிலையில், மீண்டும் வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தையை நடத்துவதற்காக அமெரிக்க அரசு சார்பில் மத்திய மற்றும் தெற்கு ஆசியாவுக்கான பிரதிநிதி பிரெண்டன் லின்ச் தலைமையிலான குழுவினர் இந்தியா வந்துள்ளனர்.இதையும் படியுங்கள் :இடைக்கால அரசில் 3 புதிய அமைச்சர்கள் பதவியேற்பு அமைச்சர்களுக்கு அதிபர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்