தமிழகம் முழுவதும் டிசம்பர் 27-ம் தேதி முதல் தவெக தலைவர் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல்.கோவையில் இருந்து தனது பயணத்தை தொடங்க விஜய் திட்டம்.விஜயின் பயணம் குறித்து ஆலோசிக்க நாளை பனையூரில் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம்?சுற்றுப்பயணத்தின் போது மாற்றுக்கட்சியில் இருந்து விலகியுள்ளோரை சந்திக்க திட்டம்.சுற்றுப்பயணத்தை மேற்கொள்ள பிரத்யேக வாகனம் தயார் செய்யப்படுவதாக தகவல்.விஜயின் சுற்றுப்பயணத்திற்கு முன்னால் கொள்கை விளக்க கூட்டங்களை நடத்தவும் திட்டம்.மாவட்ட வாரியாக கொள்கை விளக்க கூட்டங்களை நடத்த தவெக முடிவு.விரைவில் கட்சி நிர்வாகிகளை அறிவிக்கவும் விஜய் முடிவு.சுற்றுப்பயணத்தின் போது விஜய் நலத்திட்ட உதவிகளை வழங்கவும் முடிவு எனத் தகவல்.ஒவ்வொரு மாவட்ட வாரியாக அந்தந்த மாவட்டங்களின் பிரச்சனைகள் குறித்த பட்டியல் தயார்.மாவட்டந்தோறும் அந்தந்த மாவட்ட பிரச்சனைகளை பட்டியலிட்டு விஜய் பேச திட்டம்.பூத் கமிட்டி அமைக்கும் பணியும் தவெகவில் தொடங்கி உள்ளதாக தகவல்.