சென்னையில் திருப்பதி திருக்குடை ஊர்வலத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது உயிரிழந்த காவலரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்த முதலமைச்சர் ஸ்டாலின், 25 லட்சம் ரூபாய் நிவாரணமும் அறிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற திருப்பதி திருக்குடை ஊர்வலத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த கொரட்டூர் காவல் ஆய்வாளர் முத்துகுமாருக்கு திடீரென மயக்கம் ஏற்படவே முகப்பேரிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மருத்துவமனையில் மாரடைப்பு ஏற்பட்டு காவலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த செய்தி கேட்டு வருத்தம் அடைந்ததாக கூறிய முதல்வர், அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தோடு 25 லட்சம் ரூபாய் நிவாரணமாக வழங்க உத்தரவிட்டுள்ளார்.