இமாச்சலப் பிரதேசத்தில் பெய்து வரும் தொடர் கனமழையால் பியாஸ் நதியில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வடமாநிலங்களில் பருவமழை வெளுத்து வாங்கி வரும் நிலையில், இமாச்சலப்பிரதேசத்தில் பெய்து வரும் கனமழையால், அங்குள்ள ஆறுகளில் கடும் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது.மழையால் பல இடங்களில் நிலச்சரிவுகளும் ஏற்பட்டுள்ள நிலையில், இன்றும் கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. பலர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில் ஆற்றங்கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.