வங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியது.மாறி மாறி போக்குக் காட்டிவந்த புயல்சின்னம் ஒருவழியாக புயலாக உருப்பெற்றது.தென்மேற்கு வங்ககடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றது.புயல் கரைகடக்கும்போது அதிகபட்சமாக மணிக்கு 90 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும்.சவுதி அரேபியா பரிந்துரைந்த ஃபெஞ்சல் என்ற பெயர் இந்த புயலுக்கு சூட்டப்பட்டுள்ளது.காரைக்கால் -மகாபலிபுரம் இடையே நாளை பிற்பகலில் புயலாகவே கரையை கடக்க வாய்ப்பு.