வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு, பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை மற்றும் முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்து மண்டலக் கண்காணிப்பு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் ரிப்பன் மாளிகை கூட்டரங்கில் நடைபெற்றது. மாநகராட்சி ஆணையாளர் குமரகுருபரன் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.