ஹைதராபாத்தில் மழைநீர் தேங்கிய சுரங்கப்பாதை வழியாக சென்ற இருசக்கர வாகன ஓட்டி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். பேகம்பேட்டை அருகே பல்கம்பேட்டை பகுதியில் உள்ள சுரங்கப்பாதையில் மழைநீர் ஆறு போல் பெருக்கெடுத்து ஓடிய நிலையில், அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் சென்ற ஷராபுதீன் என்ற இளைஞர், நீரில் மூழ்கி உயிரிழந்தார். புதன்கிழமை இரவு முழுவதும் கொட்டித் தீர்த்த கனமழையால் தாழ்வான பகுதிகளிலும், சாலைகளிலும் வெள்ளம் சூழ்ந்தது.இதையும் படியுங்கள் : குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் குளோரின் வாயு கசிவு சுற்றுவட்டார பகுதி மக்களுக்கு கண் எரிச்சல், வாந்தி, மயக்கம்