கேரள மாநிலம் கொச்சி கடற்படை தள அலுவலகத்தை தொலைபேசியில் தொடர்புகொண்டு, ஐ.என்.எஸ். விக்ராந்த் போர்க் கப்பலின் விபரங்களை கேட்டதாக, இளைஞரை கேரள காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பிரதமர் அலுவலகத்தில் இருந்து பேசுவதாக கூறிய அந்த இளைஞர், ஐ.என்.எஸ். விக்ராந்த் போர்க்கப்பல் தற்போது எங்கு உள்ளது என கேட்டுள்ளார். இதனால், சந்தேகம் அடைந்த கடற்படை தள அதிகாரிகள், கேரள காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து, கோழிக்கோடு பகுதியை சேர்ந்த முஜீப் ரகுமான் என்பவரை போலீசார் கைது செய்தனர்.