PF பயனாளர்கள் இனி மொத்தமாக எடுத்துக் கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. PF திட்டத்தில் 13 சிக்கலான விதிகள் ஒன்றிணைக்கப்பட்டு அத்தியாவசியம், வீட்டுத் தேவை மற்றும் சிறப்பு தேவைகள் எனப் பிரிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் உறுப்பினர்கள் தங்கள் இருப்பில் 100% வரை பணத்தை திரும்பப் பெறலாம். கல்வி தேவைக்காக மூன்று முறைக்கு பதிலாக 10 முறையும், திருமண தேவைக்காக மூன்று முறைக்கு பதிலாக ஐந்து முறையும் எடுத்துக் கொள்ளலாம். மேலும் அனைத்து பகுதியளவு பணம் எடுப்பதற்கும் குறைந்தபட்ச சேவை காலம் 12 மாதங்களாகக் குறைக்கப்பட்டுள்ளது. சிறப்பு நெருக்கடி சூழல்களில் பணம் எடுப்பதற்கான காரணங்களை இனி சந்தாதாரர்கள் விளக்கத் தேவையில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது..