ஜம்மு காஷ்மீரின் பகல்காமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு உலக தலைவர்கள் பலர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ள பதிவில், காஷ்மீரில் இருந்து வெளியாகும் செய்தி மிகவும் கவலையளிப்பதாவும், பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியாவுடன் அமெரிக்கா உறுதியாக நிற்கும் எனவும் தெரிவித்துள்ளார். அதே போல் ரஷ்ய அதிபர் புதின், இந்த மிருகத்தனமான குற்றத்திற்கு எந்த நியாயமும் இல்லை என்றும், பயங்கரவாதத்திற்கு எதிரான உலகளாவிய போராட்டத்தில் இந்தியாவுடன் ஒத்துழைப்பை ரஷ்யா தொடர்ந்து வழங்கும் எனவும் தெரிவித்துள்ளார்.