இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை சீரழிக்கும் வகையில் வெளியுறவு அமைச்சர் சர்க்கஸ் வேலைகளை செய்து வருவதாக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், கூடிய விரைவில் சீன வெளியுறவு அமைச்சர் இந்தியா வந்து இருநாட்டு உறவுகளில் ஏற்பட்ட முன்னேற்றத்திற்காக பிரதமரை பாராட்டுவார் என நினைப்பதாக சாடியுள்ளார்.