சமத்துவமின்மையால் தவிக்கும் பெண்கள் : தொழில் நுட்பம் வளர்ச்சிடைந்துள்ள இந்த காலகட்டத்திலும் வன்முறை, பொருளாதார சமத்துவமின்மை, சுகாதார பிரச்னைகள் போன்றவற்றிலிருந்து பெண்கள் இன்னும் மீண்டு வரவில்லை என குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கருத்து தெரிவித்தார். வலிமையான பெண்கள் என்ற தலைப்பில் டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர், மேற்கண்ட பிரச்னைகளிலிருந்து பெண்கள் விடுபட்டால்தான், அவர்களுக்கான வலிமையான கட்டமைப்பு உருவாக்கப்படும் என்று கூறினார். சுயமரியாதையோடு, பொருளாதார ரீதியாக தனித்து வாழும் திறமையும் பெண்களுக்கு உள்ளதாக அவர் பெருமிதம் தெரிவித்தார். Related Link ஹோலி பண்டிகை: மின்னொளியில் ஜொலிக்கும் பிருந்தாவன்