ஹைதராபாத்தில் சாலையோர கடையில் மோமோஸ் சாப்பிட்ட பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் சாலையோரக் கடைகளில் மோமோஸ் சாப்பிட்ட 10 பேருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. மேலும் வேறு இடத்தில் மாமோஸ் சாப்பிட்ட பெண் ஒருவர் உடல்நலம் பாதித்து உயிரிழந்ததாகவும் கூறப்பட்டது. இதனைத் தொடர்ந்து உணவு பாதுகாப்புத்துறை மற்றும் போலீசார் விசாரணையில் இறங்கியதில், உடல்நலம் பாதிக்கப்பட்ட 10 பேரும் வேவ்வேறு ஸ்டால்களில் மோமோஸ் வாங்கி சாப்பிட்டாலும், ஒரே விற்பனையாளரால் தயாரிக்கப்பட்ட மோமோஸ்களை வாங்கி உட்கொண்டது தெரியவந்தது.