வாக்காளர் பட்டியல் தூய்மையானது, நேர்மையானது என எழுத்துப்பூர்வமாக கையெழுத்திட்டு தேர்தல் ஆணையம் முதலில் பிரமாண வாக்குமூலம் தருமா? என இந்தியா கூட்டணி கட்சிகள் அதிரடியாக கேள்வி எழுப்பியுள்ளன. தேர்தல் ஆணையத்தின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த இந்தியா கூட்டணி கட்சி எம்பிக்கள், மகாராஷ்டிராவில் கூடுதல் வாக்குகள் சேர்க்கப்பட்டது, மகாதேவ்புராவில் வாக்காளர் பட்டியலில் முறைகேடு, வீடியோ பதிவு அழிப்பு குறித்து விளக்கம் கிடைக்கவில்லை என புகார் கூறினர். மேலும் எதிர்க்கட்சிகள் எழுப்பிய குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரிக்காமல் ஒருதலைபட்சமாக செயல்படும் அதிகாரிகளின் கைகளில் தேர்தல் ஆணையம் சிக்கியுள்ளதாகவும் கடுமையாக விமர்சித்தனர்.இதையும் படியுங்கள் : பீகாரை தொடர்ந்து ஒடிசாவில் நடைபெற உள்ள SIR நடவடிக்கை அடுத்த மாதம் தொடங்கும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம்..!