பீகார் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி அறிவித்துள்ளது. 243 தொகுதிகளை கொண்ட பீகார் சட்டசபைக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இதனிடையே பீகார் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம் கூட்டணி அமைத்துள்ள நிலையில், அந்த கூட்டணியில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா இடம்பெறும் என எதிர்பார்க்கபட்டது. ஆனால் கூட்டணியில் தொகுதி பங்கீடு தொடர்பாக குழப்பம் நீடித்து வரும் நிலையில், தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி பின் வாங்கியுள்ளது.