அமெரிக்க அதிபர் ட்ரம்பின் அழைப்பை நிராகரித்தது ஏன் என பிரதமர் மோடி விளக்கம் அளித்துள்ளார். ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பிரதமர் மோடி பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும் வைத்தார். பின்னர் கூட்டத்தில் பேசிய அவர், தாம் G7 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக கனடாவில் இருந்தபோது, வாஷிங்டனுக்கு வாருங்கள் பேசிக் கொண்டே உணவருந்தலாம் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அழைத்ததாக தெரிவித்தார். ஆனால், ஜெகந்நாதரின் புன்னிய பூமியான ஒடிசாவுக்கு செல்ல வேண்டும் என்பதால் ட்ரம்பின் அழைப்பை நிராகரித்து விட்டதாகத் தெரிவித்தார்.இதையும் படியுங்கள் : ராணுவ வீரர்களை சந்தித்து உரையாடிய ராஜ்நாத் சிங்..