இந்தியா பாகிஸ்தான் இடையே ராணுவ மட்டத்திலான பேச்சுவார்த்தையின் முடிவிலேயே போர் முடிக்கப்பட்டது என ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். போரை தாம்தான் நிறுத்தியதாக அதிபர் டிரம்ப் தொடர்ந்து கூறி வரும் நிலையில், அமெரிக்காவில் இருந்தபடியே வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இது தொடர்பாக தெளிவாக செய்தியாளர்களிடம் விளக்கமளித்தார்.