தனது தந்தையுடன் பைக்கில் சென்று கொண்டிருந்த பெண். கையில் பயங்கர ஆயுதங்களுடன் திடீரென குறுக்கே புகுந்த இளைஞன். தந்தையின் கண்ணெதிரிலேயே பெண்ணை சரமாரியாக தாக்கி கொன்ற கொடூரம். மூன்று குழந்தைகளுக்கு தாயான பெண்ணை அடித்து கொலை செய்த கொடூரன் யார்? பின்னணி என்ன?ராஜஸ்தான் மாநிலம், தோல்பூர சேர்ந்தவங்க கோமல். இவங்களுக்கு கல்யாணமாகி மூணு பிள்ளைகள் இருக்காங்க. கணவன், குழந்தைகள்னு சந்தோஷமா வாழ்ந்துட்டு வந்த கோமலுக்கு கடந்த சில தினங்களா, கஜேந்திரா-ங்குறவனால மன உளைச்சலுக்கு ஆளாகிருக்காங்க. கடந்த 13 வருஷத்துக்கு முன்னாடி கோமலோட அப்பா தன்னோட மகளுக்கு வரன் பாத்துருக்காரு. அந்த சமயத்துல அறிமுகமானவந்தான் இந்த கஜேந்திரா. இவன்கூடதான் கோமலுக்கு முதல நிச்சயதார்த்தம் நடந்துச்சு. ஆனா, நிச்சயதார்த்தம் முடிஞ்ச சில நாட்களிலேயே கஜேந்திராவோட சுயரூபம் தெரிய ஆரம்பிச்சிருக்குது. கஞ்சா போதைக்கு அடிமையான கஜேந்திரா போதையில பெத்தவங்கள அடிச்சு சித்ரவதை பண்ண விஷயம் கோமலோட பெற்றோருக்கு தெரிய வந்துருக்குது.மகனுக்கு போதை பழக்கம் இருக்குறத சொல்லாம ஏமாத்திட்டாங்களேன்னு சொல்லி கல்யாணத்த நிறுத்திட்டாரு. ஆனா, கஜேந்திரா, கோமல் வீட்டுக்கு போய் தன்ன தான் கல்யாணம் பண்ணிக்கனும் சொல்லி பிரச்சணை பண்ணிருக்கான். இப்படியே, போன சரிப்பட்டு வராதன்னு நினைச்ச கோமலோட அப்பா, 2014-ல நல்ல பையனா பாத்து மகளுக்கு கல்யாணம் பண்ணி வச்சிட்டாரு. அதுக்கப்புறம், கோமலோட வழிக்கு வராம இருந்த கஜேந்திரா, பல வருஷங்களுக்கு அப்புறம் மறுபடியும் தகராறு பண்ண ஆரம்பிச்சிருக்கான். கோமலும், கஜேந்திராவும் நிச்சயதார்த்தம் முடிஞ்ச சில நாட்களிலேயே நெருங்கி பழகிருக்காங்க. அந்த புகைப்படங்கள வச்சு அவங்கள மிரட்டுன கஜேந்திரா, உன் புருஷனையும், குழந்தைகளையும் விட்டுட்டு என்கூட வந்துரு, இல்லனா புகைப்படங்கள எல்லாருக்கும் அனுப்பிடுவேன் மிரட்டிருக்கான். ஆனா, அவன ஒரு பொருட்டாவே மதிக்காதா கோமல், உன்னால என்ன பண்ண முடியுமோ பண்ணிக்கோன்னு சொல்லிருக்காங்க. அத கேட்டதும் ஆத்திரமடைஞ்ச கஜேந்திரா, என்கிட்டே திமிரா பேசுறியா, உன்ன கொல்லாம விடமாட்டேன்னு சொல்லிட்டு ஃபோன கட் பண்ணிருக்கான். அவன் போதையில பேசுறான்னு நினைச்சு கோமல் அத பெருசா கண்டுக்கல. கோமல் எப்ப வீட்டவிட்டு வெளியே வருவாங்கன்னு அவங்க வீட்டு பக்கத்துல உள்ள காலியிடத்துல மறஞ்சிருந்து வாட்ச் பண்ணிட்டே இருந்துருக்கான். அவன் நினச்ச மாதிரியே, கோமல், அவங்க அப்பாகூட பைக்ல கடைக்கு போய்ட்டு இருந்துருக்காங்க. அத கவனிச்ச கஜேந்திரா, இன்னொரு பைக்ல அவங்கள ஃபாலோ பண்ணிட்டே போய், ராஜகேதா பைபாஸ்ல வச்சு, கோமல் அப்பா ஓட்டுன பைக்க வழிமறிச்சு, வாக்குவாதத்துல ஈடுபட்டுருக்கான். கூட தன்னோட நண்பனையும் கூப்பிட்டு போனவன், திடீர்னு கையில வச்சிருந்த ஆயுதங்களால கோமல சரமாரியா தாக்கிருக்கான். அதுல, நிலைகுலைஞ்ச கோமல் சம்பவ இடத்துலேயே சுருண்டு விழுந்து உயிரிழந்துட்டாங்க. அதுக்கப்புறம், கோமல கொலை செஞ்ச ஆயுதத்தோட போலீஸ் ஸ்டேஷனுக்குப் போன கஜேந்திரா நடந்த எல்லாத்தையும் சொல்லி போலீஸ்கிட்ட சரணடஞ்சிருக்கான். அடுத்து, அவன் மேல கொலை வழக்குப்பதிவு பண்ணி ஜெயில்ல அடைச்சிட்டாங்க. இதையும் பாருங்கள் - பிறந்தநாள் கேக்கை மேடையில் தூக்கி வீசி விட்டு சென்ற தொண்டர்