ரயில்வே டிக்கெட் முன்பதிவில் அந்த தந்த வகுப்புகளின் மொத்த இருக்கை அல்லது படுக்கைகளில் 25 சதவிகிதம் மட்டுமே வெயிட்டிங் லிஸ்டாக முன்பதிவு செய்யப்படும் என்ற முடிவில் உறுதியாக இருப்பதாக ரயில்வே போர்டு தெரிவித்துள்ளது. கடந்த 16 ஆம் தேதி முதல் இந்த நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. அளவுக்கு அதிகமாக முன்பதிவை அனுமதித்ததால், காத்திருப்போர் பட்டியலில் உள்ள பலருக்கு படுக்கை வசதி உறுதி செய்யப்படுவதில்லை என்பதுடன் ரயில்களில் கூட்டம் அதிகமாக காணப்படுவதாகவும் தொடர்ந்து புகார்கள் வந்தன. இது குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்ட பின்னர், முன்பதிவு காத்திருப்போர் பட்டியலை 25 சதவிகிதமாக வரையறுத்து விட்டதாக ரயில்வே போர்ட் செயல் இயக்குநர் திலீப் குமார் தெரிவித்தார்.இதையும் படியுங்கள் : மீண்டும் அண்ணா பல்கலை. மாணவிக்கு மிரட்டல் - பகீர் தகவல்