குஜராத் மாநிலத்தில் SIR பணிகள் மூலம் வாக்குத்திருட்டு நடப்பதாக மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், SIR பணிகள் எந்த வித நிர்வாக நடைமுறையும் இல்லாமல் முன் கூட்டியே திட்டமிடப்பட்ட ஓட்டுத் திருட்டு என பதிவிட்டுள்ளார். குறிப்பிட்ட சமூகங்கள் மற்றும் காங்கிரஸ் ஆதரவு வாக்குச்சாவடிகளில் இருந்து ஓட்டுகள் திட்டமிட்டு நீக்கப்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்துள்ளார். இத்தகைய செயல் மூலம் யார் அதிகாரத்தில் இருக்க வேண்டும் என்பதை மக்கள் தீர்மானிக்காமல், பாஜக தீர்மானிப்பதாகவும் ராகுல் காந்தி அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். Related Link திட்டமிடப்படாத SIR பணிகளால் இதுவரை 126 பேர் உயிரிழப்பு