அரியானா சட்டப்பேரவைத் தேர்தலில் ஜூலானா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் வினேஷ் போகத் வெற்றி பெற்றுள்ளார். இவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜகவின் யோகேஷ் குமாரை 6,015 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். வினேஷ் போகத் 65 ஆயிரத்து 80 வாக்குகளும், யோகேஷ் குமார் 59 ஆயிரத்து 65 வாக்குகளும் பெற்றுள்ளனர்.