மாநிலங்களவையில் எதிர்க்கட்சி எம்.பிக்களின் கடும் அமளிக்கு நடுவில் தமிழக மீனவர்கள் பிரச்சனை குறித்து எம்.பி வைகோ பேசியுள்ளார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டுத்தொடரின் மூன்றாவது அமர்வில் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதற்கிடையே பேசிய மாநிலங்களவை எம்.பி வைகோ, கட்சத்தீவு ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனவும், இலங்கையில் கைது செய்து அடைக்கப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும், அவர்களது உடமைகளையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.