இந்தியா கண்டனம் : மத்திய கிழக்கில் போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ள நிலையில், இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. வெளியுறவு அமைச்சம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஈரான் மற்றும் வளைகுடா பிராந்தியத்தில் நடைபெறும் நிகழ்வால் இந்தியா மிகுந்த கவலை கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளது. அனைத்து தரப்பினரும் நிதானத்தை கடைபிடித்து, பதற்றத்தை தணிக்க வேண்டும் எனவும், மக்கள் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என வலியுறுத்துவதாகவும் தெரிவித்துள்ளது. பதற்றத்தை தணித்து, அடிப்படை பிரச்னைகளை தீர்க்க உரையாடல் மற்றும் ராஜதந்திரம் தொடர வேண்டும் எனவும், அனைத்து நாடுகளின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு மதிக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. Related Link மேற்குவங்கத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு