பீகாரில் சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள சூழலில், பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி தொண்டர் துலார்சந்த் யாதவ் கொலை வழக்கில், முதலமைச்சர் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தள கட்சி வேட்பாளர் ஆனந்த் சிங்கை போலீசார் கைது செய்தனர். மேலும் சம்பவத்தின் போது நிகழ்விடத்தில் இருந்த மணிகாந்த் தாக்கூர், ரன்ஜீத் ராம் ஆகிய இருவரையும் கைது செய்தனர். இரண்டு போட்டி வேட்பாளர்களின் ஆதரவாளர்களிடையே ஏற்பட்ட மோதலில் கொலை நடந்திருப்பதாக, முதற்கட்ட விசாரணைக்கு பின் பாட்னா எஸ்.எஸ்.பி தெரிவித்துள்ளார். கடந்த வியாழக்கிழமை மோகாமா பகுதியில் ஜன்சுராஜ் வேட்பாளர் பியூஷ் பிரியதர்ஷிக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டிருந்த போது துலார் சந்த் யாதவ் சுட்டுக் கொல்லப்பட்டார்.இதையும் படியுங்கள் :இருசக்கர வாகனத்தின் மீது மோதிய கார்