பைனான்ஸ் நிறுவனத்தின் டார்ச்சரை தாங்க முடியாமல் ஆசையாசையாக வாங்கிய பைக்கை இளைஞர் தீயிட்டு கொளுத்திய சம்பவம் தெலுங்கானா மாநிலத்தில் நடந்துள்ளது. தனியார் பைனான்ஸ் நிறுவனத்திடம் கடன் பெற்று வாங்கிய பைக்குக்கு இளைஞர் சரிவர தவணை செலுத்தி வந்த நிலையில் நடப்பு மாதத்துக்கான தவணையை செலுத்துவதற்கு தாமதம் ஏற்பட்டதாக தெரிகிறது. தவணையை செலுத்தக்கூறி பைனான்ஸ் நிறுவனம் டார்ச்சர் கொடுத்து வந்ததால் அதை பொறுத்துக்கொள்ள முடியாமல் ஆத்திரத்தில் இளைஞர் பைக்கை தீயிட்டு கொளுத்தியதாக தெரிகிறது.