குஜராத்தின் சூரத் மாவட்டத்தில் துணி தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் சிக்கி இருவர் பலியான நிலையில், 20 பேர் படுகாயமடைந்துள்ளனர். ஜோல்வா கிராமத்தில் செயல்பட்டு வரும் சந்தோஷ் துணி தொழிற்சாலையில் நேற்று மாலை திடீரென ரசாயன டிரம் வெடித்து சிதறியது. இதனால் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதில் 2 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 20 பேர் படுகாயமடைந்த நிலையில் இருவரின் நிலைமை கவலைக்கிடம் என சொல்லப்படுகிறது.இதையும் படியுங்கள் : திரிணாமுல் காங்கிரசின் போராட்ட பந்தலை அகற்றிய ராணுவம் மத்திய அரசு தங்களின் குரலை ஒடுக்க முயல்வதாக மம்தா புகார்