பஹல்காம் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்து உதவியதாக இரண்டு பேரை என்.ஐ.ஏ அதிகாரிகள் கைது செய்தனர். பஹாம்காமின் பட்கோலே பகுதியை பர்வேஸ் அகமது மற்றும் ஹில்பார்க் பகுதியை சேர்ந்த பஷீர் அகமது ஜோதார் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர். தாக்குதலில் ஈடுபட்டவர்கள் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பை சேர்ந்தவர்கள் என இருவரும் உறுதி செய்தனர். பயங்கரவாதிகளுக்கு உணவு, இருப்பிடம், போக்குவரத்து உள்ளிட்ட வசதிகளை இவர்கள் செய்து வந்ததாக என்.ஐ.ஏ அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.இதையும் படியுங்கள் : "தொழில்துறையில் பின்தங்கிய தமிழகம்" இபிஎஸ் விமர்சனம்