இமாச்சல பிரதேசம் சர்மூர் மாவட்டத்தில் சகோதரர்கள் இருவர் ஒரே பெண்ணை திருமணம் செய்து கொண்டனர். இங்குள்ள ஹாட்டி சமூகத்தில் பலதார திருமணம் நடைமுறையில் உள்ள நிலையில், பிரதீப் நேகி மற்றும் கபில் நேகி என்ற இரு சகோதரர்கள், சுனிதா சவுகான் என்பவரை, குடும்பத்தினரின் முழு சம்மதத்துடன் பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்து கொண்டனர்.