சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு புறப்பட தயாரான விமானம் இயந்திர கோளாறு காரணமாக ஓடு பாதையிலேயே நிறுத்தப்பட்டது. சென்னை உள்நாட்டு முனையத்தில் இருந்து ஸ்பைஸ்ஜெட் விமானம் 65 பயணிகள் மற்றும் 5 ஊழியர்களுடன் புறப்பட்டது. ஓடுபாதையிலேயே இயந்திர கோளாறு கண்டறியப்பட்டு விமானம் நிறுத்தப்பட்டு இழுவை வண்டி மூலம், விமானம் மீண்டும் அதன் நிற்குமிடத்திற்கு கொண்டு வரப்பட்டது. இதனை தொடர்ந்து விமான பொறியாளர்கள் குழுவினர் விமானத்தில் பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டனர்.