இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போர் நிறுத்தத்தை ஏற்படுத்த அமெரிக்க அதிபர் டிரம்ப் வர்த்தக உடன்படிக்கையை பயன்படுத்தியதாக கூறப்படுவதை வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் திட்டவட்டமாக மறுத்துள்ளார். நியூ யார்க்கில் நியூஸ்வீக் இதழுக்கு அளித்த பேட்டியில் இதை தெரிவித்த அவர், மோடியுடன் அமெரிக்க துணை அதிபர் வான்ஸ் தொலைபேசியில் பேசும் போது தாம் பிரதமருடன் அதே அறையில் இருந்த தாக கூறினார்.