இந்தியா - பாகிஸ்தான் போரை தாம் தான் நிறுத்தியதாக கடந்த 38 நாட்களில் 15 ஆவது முறையாக பெருமை பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அது குறித்த ஒரு கதை கூட எழுதப்படவில்லை என்றார். கனடாவில் நடந்த ஜி 7 உச்சி மாநாட்டிலிருந்து டிரம்ப் முன்கூட்டியே வெளியேறியதால், பிரதமர் மோடியுடனான திட்டமிடப்பட்ட சந்திப்பு நடக்காமல் போனது. இதையடுத்து டிரம்ப் வேண்டுகோளின் பேரில் பிரதமர் மோடி, அவரை தொலைபேசியில் அழைத்து பேசினார். அப்போது இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போர் நிறுத்த விவகாரத்தில் அமெரிக்க எந்தப் பங்கும் வகிக்கவில்லை, மூன்றாவது நாட்டின் தலையீட்டை அனுமதிக்க முடியாது என பிரதமர் மோடி கூறியும், அடங்காத டிரம்ப், போரை தான் நிறுத்தியாக பெருமை பேசி வருகிறார்.இதையும் படியுங்கள் : சுத்தி சுத்தி அடிக்கும் ஈரான்.. ஓடி ஒளியும் இஸ்ரேல் மக்கள் - அதிர்ச்சி காட்சி