உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் கங்கா ஆரத்தியின் போது மூத்த தொழிலதிபர் ரத்தன் டாட்டாவுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். தசாஷ்வமேத் காட் பகுதியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் தங்கள் கைகளில் ரத்தன் டாட்டாவின் புகைப்படத்தை ஏந்தியபடி அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.