கொல்கத்தா பயிற்சி பெண் மருத்துவரின் பாலியல் கொலை வழக்கில் சிபிஐ விசாரணை மீது அதிருப்தி தெரிவித்து ஜூனியர் மருத்துவர்கள் அடுத்தக்கட்ட போராட்டம் அறிவித்துள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிக்கையில் ஒரு நபரின் பெயரை மட்டுமே குறிப்பிட்டுள்ளதாகவும், மற்றவர்களின் பெயரை நேரடியாக குறிப்பிடாமல் அவர்களது பங்கு மறைக்கப்படுவதாகவும் மருத்துவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். சிபிஐ விசாரணையில் பல குளறுபடிகள் இருப்பதாகவும், அதனை கண்டித்து வரும் 9-ம் தேதி முதல் போராட்டத்தை தீவிரப்படுத்தப் போவதாகவும் ஜூனியர் மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.