அமெரிக்காவில் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது இந்திய மாணவர் தவறுதலாக துப்பாக்கி வெடித்து குண்டு பாய்ந்ததில் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த 23 வயது ஆர்யன் ரெட்டி, அட்லாண்டாவில் உள்ள கன்சாஸ் ஸ்டேட் யுனிவர்சிட்டியில் முதுநிலை பட்டம் படித்து வந்த நிலையில் தனது பிறந்த நாளை நண்பர்களுடன் வீட்டில் கொண்டாடியதாக தெரிகிறது. அப்போது ஆர்யன் தனது வேட்டை துப்பாக்கியை துணியால் சுத்தப்படுத்தியதாகவும் அப்போது எதிர்பாராத விதமாக துப்பாக்கியின் ட்ரிகரை அழுத்தியதில் வெளியேறிய குண்டு ஆர்யனின் மார்பை துளைத்ததாகவும் தெரிகிறது. இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த ஆர்யனை நண்பவர்கள் உடனடியாக அழைத்துச்சென்ற நிலையில் அவர் ஏற்கெனவே உயிரிழந்தது தெரியவந்தது.