மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத்தில் விபத்து நிகழ்ந்த பகுதியில் போக்குவரத்தை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டிருந்த காவலர், பின்னால் அதிவேகமாக வந்த லாரி மோதி பரிதாபமாக பலியானார். Morgram தேசிய நெடுஞ்சாலையில் லாரி ஒன்று விபத்துக்குள்ளானதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வாகனங்கள் ஸ்தம்பித்து நின்றன. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த காவலர் ராஜ்குமார் கர்மாகர், விபத்தில் சிக்கிய லாரியை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அதிவேகமாக வந்த மற்றொரு லாரி மோதியதில், காவலர் உடல்நசுங்கி உயிரிழந்தார்.இதையும் படியுங்கள் : சீரடி சாய்பாபாவிற்கு ரூ.59 லட்சம் மதிப்பில் தங்க கிரீடம் நன்கொடை..!