உத்திரபிரதேச மாநிலம் நொய்டாவில், இளைஞர் ஒருவர் சிகரெட் பஞ்சுகளை மறு சுழற்சி செய்து பொம்மைகளை தயார் செய்து வருகிறார். குப்தா என்பவரும் அவரது சகோதரரும் கோட் எஃபர்ட் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை நிறுவி, சிகரெட் பஞ்சுகளை சேகரித்து மறுசுழற்சி செய்யும் நிலையில், அந்த வீடியோ இன்ஸ்டாவில் வெளியாகி வைரலாகி வருகிறது.