ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை, போர்நிறுத்தம் மற்றும் அமெரிக்க அரசின் தலையீடு குறித்து விவாதிக்க நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தை உடனடியாகக் கூட்ட வேண்டும் என்று எதிர்கட்சித் தலைவர் ராகுல்காந்தி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். நாளை இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ள நிலையில், போர் குறித்து "மக்களும் அவர்களின் பிரதிநிதிகளும் விவாதிப்பது மிகவும் முக்கியம்" என்று அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.