மாலி நாட்டின் காயோஸ் பகுதியில் உள்ள சிமெண்ட் தொழிற்சாலையில் பணியாற்றி வந்த 3 இந்தியர்களை பயங்கரவாதிகள் கடத்தி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முதற்கட்ட விசாரணையில் இந்தியர்களை கடத்தியது அல்-கொய்தா அமைப்பின் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகள் என்பது தெரிய வந்துள்ளது. இந்தியர்கள் கடத்தப்பட்டதை உறுதி செய்துள்ள மத்திய அரசு, அவர்களை பாதுகாப்பாகவும் விரைவாகவும் மீட்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாலி அரசை வலியுறுத்தியுள்ளது.