கேரள மாநிலம் இடுக்கியில் வெளுத்து வாங்கிய அதி கனமழையால் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் குடியிருப்புவாசிகள் சிரமம் அடைந்தனர். இடுக்கி தூவல் நீர்வீழ்ச்சியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில் செந்நிறத்தில் நீர் ஆக்ரோஷமாக கொட்டி வருகிறது. இதனால் ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. கூட்டாற்றில் கரைபுரண்டு ஓடும் நீரில் வேன் அடித்து செல்லப்பட்ட நிலையில் அதில் பயணிகள் இல்லாததால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.இதையும் படியுங்கள் : போர் விமானங்களுக்காக ரூ.65,400 கோடி செலவிட திட்டம்