வரும் ஒன்றாம் தேதி முதல் 10 ஆண்டுகள் பழமையான டீசல் வாகனங்கள் மற்றும் 15 ஆண்டுகள் பழமையான பெட்ரோல் வாகனங்களுக்கு டெல்லியில் எரிபொருள் நிரப்பப்பட மாட்டாது என காற்று தர நிர்வாக ஆணையம் அறிவித்துள்ளது. எந்த மாநிலத்தில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களாக இருந்தாலும் எரிபொருள் நிரப்பக் கூடாது என டெல்லியில் உள்ள அனைத்து எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கும் ஆணையம் கறாரான உத்தரவை பிறப்பித்துள்ளது. இதற்காக டெல்லியில் உள்ள 520 எரிபொருள் நிரப்பும் நிலையங்களில், 500 நிலையங்களில், தாமாகவே பதிவு எண்ணை கண்டுபிடிக்கும் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. டெல்லியை சுற்றியுள்ள குருகிராம், ஃபரீதாபாத், காசியாபாத், கவுதம் புத்தா நகர். சோனிப்பேட் ஆகிய மாவட்டங்களிலும் இந்த உத்தரவு அமல்படுத்தப்படும்.இதையும் படியுங்கள் : காசாவை தொடர்ந்து ஈரானையும் தாக்கும் இஸ்ரேல்..