குரங்கு கூட்டத்தில் யோகி ஆதித்யநாத்தை அமர வைத்தால், யார் குரங்கு, யார் ஆதித்யநாத் என்பதை கண்டுபிடிக்க முடியயாது என சமாஜ்வாதி தலைவரும் உ.பி. முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ் பதிலடி கொடுத்துள்ளார். பீகாரில் தேர்தல் பரப்புரை நடத்திய உ.பி. முதல்வர் ஆதித்யநாத், ராகுல், அகிலேஷ் மற்றும் தேஜஸ்வி யாதவை, காந்தியடிகளின் மூன்று குரங்குகள் என விமர்சித்தார். இதற்கு பதிலளித்துள்ள அகிலேஷ் யாதவ், பிரச்சனைகளில் இருந்து மக்களை திசை திருப்புவதற்காக ஆதித்யநாத் தேர்தல் நேரத்தில் காந்தியடிகளை பற்றி பேசுவதாக கண்டனம் தெரிவித்துள்ளார். பீகார் தேர்தல் பரப்புரையில் இந்தியா கூட்டணியின் இந்த மூன்று முக்கிய தலைவர்களை குரங்குகள் என விமர்சித்த ஆதித்யநாத், அவர்கள் சாதி அடிப்படையில் மக்களை பிரித்து பீகாரில் காட்டாட்சியை கொண்டு வர முயற்சிப்பதாக கூறியதற்கு அகிலேஷ் பதிலளித்துள்ளார்.