இந்தி மற்றும் பிற இந்திய மொழிகள் இடையே எந்த மோதலும் இல்லை எனவும், இந்தியர்கள் தங்கள் மொழிகளைப் பாதுகாத்து அவற்றை "அழியாத" மொழியாக மாற்ற வேண்டும் எனவும் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்துள்ளாா். குஜராத் மாநிலம் காந்திநகரில், இந்தி நாளையொட்டி பேசிய அவர், இந்தி வெறும் பேச்சு மொழி அல்லது நிர்வாக மொழியாக மட்டுமன்றி, அறிவியல், தொழில்நுட்பம், நீதி மற்றும் காவல் துறையின் பயன்பாட்டு மொழியாக மாற வேண்டும் எனவும், இந்திய மொழிகளில் நிர்வாகம் மற்றும் பொது சேவைகள் செயல்படும்போது மட்டுமே மக்களுடன் மொழிகள் உண்மையான தொடர்பில் இருக்கும் எனவும் கூறினார்.