ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் கடந்த சனிக்கிழமை 4 இளைஞர்கள் பலியான கார் விபத்து தொடர்பான நெஞ்சை பதறவைக்கும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. பழைய அகமதாபாத் தேசிய நெடுஞ்சாலையில் அதிகாலை 3 மணியளவில் இரண்டு கார்கள் மோதிக் கொண்டதில் 4 இளைஞர்கள் பலியானதுடன் 6 பேர் படுகாயமடைந்தனர். இந்நிலையில், பிறந்தநாள் பார்ட்டியில் பங்கேற்று திரும்பிய இளைஞர்கள், கையில் சிகரெட் பிடித்த படி காரை அதிவேகமாக ஓட்டிச் சென்று வளைவில் திருப்பிய போது மற்றொரு கார் மீது மோதியது தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது.இதையும் படியுங்கள் : அமெரிக்காவின் புதிய வரைபடம் - டிரம்ப்பால் புதிய சர்ச்சை