உத்தர பிரதேச மாநிலம் கான்பூர் ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் இருந்து தவறி கீழே விழுந்த பெண்ணை துரிதமாக செயல்பட்டு ரயில்வே போலீசார் காப்பாற்றிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.கான்பூரில் இருந்து தனது குடும்பத்துடன் டெல்லி செல்வதற்காக அப்பெண் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறியுள்ளார். ஆனால் அவரின் குழந்தைகள் வருவதற்கு முன் ரயில் புறப்பட்டதால், பதறிப்போன அப்பெண் படிக்கட்டில் நின்றுக்கொண்டு உதவி கேட்டார். அப்போது எதிர்பாராத விதமாக கால் தவறி கீழே விழுந்த அவரை ரயில்வே போலீசார் அனூப் குமார் நொடிப்பொழுதில் காப்பாற்றினார்.