நாட்டில் அனலைக் கிளப்பும் பிரச்னைகளுக்கு இடையே நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. டிசம்பர் 20 ஆம் தேதி வரை நடைபெற உள்ள கூட்டத்தொடரில் 16 மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. குறிப்பாக சர்ச்சைக்குரிய மற்றும் நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் விசாரணையில் உள்ள வக்பு வாரிய திருத்த மசோதாவை நிறைவேற்ற மத்திய பாஜக அரசு முயற்சி மேற்கொள்ளும் எனத் தெரிகிறது. அதேசமயம் 5 புதிய மசோதாக்களை அறிமுகம் செய்து நிறைவேற்ற பாஜக கூட்டணி அரசு திட்டமிடப்பட்டுள்ளது. குறிப்பாக ஒரு நாடு ஒரே தேர்தல் மசோதாவை கொண்டு வர வாய்ப்பு உள்ளது.