ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் சமீபத்தில் நடந்த இருதரப்பு மோதல்களின் பின்னணியில் இந்தியாவின் கை உள்ளது என்ற பாகிஸ்தானின் விஷம பேச்சு அடிப்படை ஆதாரமற்றது என ஆப்கனின் தாலிபன் அரசு மறுத்துள்ளது.இந்த மோதல்களில் இருதரப்பிலும் பலர் உயிரிழந்த நிலையில் தற்போது போர்நிறுத்த உடன்படிக்கை அமலில் உள்ளது. அதற்கு முன்னர் உள்ளூர் ஊடகங்களிடம் பேசிய பாகிஸ்தான் ராணுவ அமைச்சர் காஜா ஆசிப், இந்தியாவுக்காக தாலிபன் அரசு பாகிஸ்தானுனட் நிழல் யுத்த த்தில் ஈடுபடுவதாக குற்றஞ்சாட்டினார். இதற்கு தற்போது பதிலளித்துள்ள ஆப்கன் ராணுவ அமைச்சர் மாலாவி முகம்மது யக்கூப் முஜாஹித், பாகிஸ்தானின் இந்த குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது என தெரிவித்துள்ளார். ஆப்கன் தனது நாட்டை வேறு எந்த நாட்டிற்கு எதிரான செயல்களுக்கும் பயன்படுத்தாது என அவர் கூறினார்.