கர்நாடகாவில், தன்னை தேர்வில் தேர்ச்சி பெற வைத்திடுங்கள் என விடைத்தாளில் 500 ரூபாயுடன் 10ம் வகுப்பு மாணவன் வைத்த கோரிக்கையால் ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.பெலகாவி மாவட்டம் சிக்கோடியில் உள்ள மேல்நிலைப் பள்ளியில் 10 வகுப்பு மாணவர்களின் விடைத்தாளை திருத்திய ஆசிரியர்கள் இதனை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மற்றொரு மாணவர் 500 ரூபாய் நோட்டை வைத்து, ''தயவுசெய்து தேர்ச்சி பெற செய்யுங்கள். என் காதல் உங்கள் கைகளில் உள்ளது,' என்றும் இன்னொருவர் 'நான் தேர்ச்சி பெற்றால் மட்டுமே என் காதலைத் தொடருவேன்' எனவும் விடைத்தாளில் எழுதியுள்ளார். மேலும் சிலர் கூடுதல் பணம் தருவதாகவும், தேர்வில் தேர்ச்சி பெறுவதைப் பொறுத்துதான் தங்கள் எதிர்காலம் இருக்கிறது என முன் வைத்த கோரிக்கைகள் இணையத்தில் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது.